‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். படம் அமோக வெற்றி பெற்று வசூலும் குவித்தது. இந்தப் படத்தில் நடித்து முடித்ததும் அஜித் சர்வதேச கார் ரேசில் கலந்து கொள்ள வெளி நாடுகளுக்கு பறந்துவிட்டார்.
மீண்டும் அஜித்–ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி இணைகிறது. இது அஜித்தின் 64 –வது படம், கதாநாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார்.
இந்தப் படத்தில் அஜித்துக்கு இணையாக ஒரு முக்கிய கேரக்டர் உள்ளது. இந்த வேடத்தில் மலையாள நடிகர் மோகன்லால் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என ஆதிக் ரவிச்சந்திரன் கருதினார்.
இதனால் அண்மையில் கேரளா சென்று மோகன்லாலிடம், படத்தின் முழுக்கதையையும் சொன்னார், ஆதிக். படத்தின் கதையும், தனது கேரக்டரும் மோகன்லாலுக்கு மிகவும் பிடித்துப்போனது.
ஆனால், அவர் இப்போது ‘திரிஷ்யம்-3‘ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். உடனடியாக அஜித் படத்துக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத நிலை.
தான் நடிக்கும் படங்களின் டைரக்டர்களிடம் கேட்டு விட்டு, பதில் சொல்வதாக கூறியுள்ளார், மோகன்லால்.
– பாப்பாங்குளம் பாரதி.