Take a fresh look at your lifestyle.

4 கே தரத்தில் ரீ-ரிலீஸ் ஆகிறது ‘அமைதிப்படை’!

மணிவண்ணன் – சத்யராஜ் கூட்டணியில் 1994 ஆண்டு வெளிவந்த படம் ‘அமைதிப்படை’.

சத்யராஜ் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இப்படத்தில் மணிவண்ணன், ரஞ்சிதா, சுஜாதா, கஸ்தூரி, மலேசியா வாசுதேவன், ஆர். சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

காட்சிகள், வசனங்கள் என அனைத்திலும் அரசியலை விமர்சித்திருந்த ‘அமைதிப்படை’ திரைப்படம் காலத்தைக் கடந்த கிளாசிக் அந்தஸ்தை பெற்றுள்ளது.

அரசியல் நையாண்டி திரைப்படங்களுக்கு டிரேட் மார்க்காக கருதப்படும் அமைதிப்படையானது அரசியல் மீம்ஸ் மற்றும் கமெண்டுகளுக்கு இன்றும் தீனியாக அமைந்து வருகிறது.

இந்த நிலையில் அமைதிப்படை திரைப்படமானது 4கே தரத்தில் ரீரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.