Take a fresh look at your lifestyle.

நாகார்ஜுனாவின் 100 வது படத்தில் இணைந்த தபு!

தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான நாகார்ஜுனா, தமிழில் ‘கூலி’ படத்தில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்தார்.

இப்போது அவர், தனது 100-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது.

தமிழில் ‘நித்தம் ஒரு வானம்’ படத்தை இயக்கிய ரா. கார்த்திக் இந்தப் படத்தை டைரக்ட் செய்கிறார்.

‘கிங் – 100’ என இந்தப் படத்துக்கு தற்காலிமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நாகார்ஜுனாவின் ஜோடியாக தபு நடிக்க உள்ளார்.

1995 ஆம் ஆண்டு தெலுங்கில் நாகார்ஜுனா நடித்த ‘சிசுந்திரி’ என்ற படத்தில் அவருடன் சேர்ந்து முதல் முறையாக தபு நடித்தார். நாகார்ஜுனாவே தயாரித்த இந்தப் படத்தில் தபுவுக்கு கவுரவ வேடம்.

இதன் பின்னர் இவர்கள் இருவரும் சேர்ந்து ‘நின்னே பெல்லடுதா’ உள்ளிட்ட படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர்.

27ஆண்டுகளுக்கு பிறகு நாகார்ஜுனா, தபு இணைந்து நடிக்கும் புதிய படத்துக்கு இப்போதே பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு ‘லாட்டரி கிங்’ என பெயர் வைக்கப்படலாம் என தெலுங்கு சினிமா உலகில் ஒரு தகவல். படக்குழு இதனை உறுதி செய்யவில்லை.

– பாப்பாங்குளம் பாரதி.