தமிழக முன்னாள் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை எழுதிய ஒரு புத்தகத்தின் பெயர் ‘பணத்தோட்டம்’. பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் நடித்த ஒரு படத்திற்கும் ‘பணத்தோட்டம்’ என்ற தலைப்பை வைத்திருந்தனர்.
1963 ஆம் ஆண்டு கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தில் சரோஜாதேவி, நாகேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
நாகேஷ், எம்.ஜி.ஆருடன் நடித்த முதல் படமும் இதுதான். ஆனால், இதில் இருவருக்கும் சேர்ந்து நடிப்பதுபோல் காட்சிகள் கிடையாது.
இந்தப் படத்துக்காக வாங்கிய சம்பளத்தில் தான் நாகேஷ், முதன் முதலாக செகண்ட் ஹாண்ட் கார் வாங்கியதாகச் சொல்வார்கள்.
நன்றி: இந்து தமிழ் திசை.