ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மதராஸி’ திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், ‘டான்சிங் ரோஸ்’ சபீர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
இந்த நிலையில், அண்மையில் வெளியான ‘மதராஸி’ படத்தின் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. யூடியூபில் பல மொழிகளைச் சேர்த்து 18 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை ‘மதராஸி’ டிரெய்லர் கடந்துள்ளது.
தமிழில் 14 மில்லியன் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 4 மில்லியன் பார்வைகளை மதராஸி டிரெய்லர் கடந்துள்ளது.