பல கோடி ரூபாய் கொடுத்தும் படம் எடுக்கத் தெரியாமல் பல பிரம்மாண்ட இயக்குநர்கள் திணறி வருகின்றனர்.
ஆனால், 80-களில் மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவான அந்த ஏழு நாட்கள் படத்தில், படம் முழுக்க ஒரு ஹார்மோனியப் பெட்டியை வைத்துக் கொண்டு நடித்தும்
முந்தானை முடிச்சு படத்தில் முருங்கைக்காயை வைத்துக் கொண்டு எவர்க்ரீன் காமெடி காட்சிகளை உருவாக்கியவர் திரைக்கதை மன்னனான பாக்யராஜ்.
சிறந்த திரைக்கதை ஆசிரியராகவும், இயக்குநராகவும் இன்னமும் பெண்களின் ஃபேவரைட் ஹீரோவாகவும் இருப்பவர்தான் நம்ம ஆளு பாக்யராஜ்.
பாரதிராஜா பட்டறையில் இருந்து வெளியே வந்த பவளமுத்து போல பாக்யராஜ் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத பொக்கிஷம் என்றே சொல்லலாம்.
எழுத்து, இயக்கம், நடிப்பு, நகைச்சுவை என அனைத்திலும் ஆல் ரவுண்டராக சிக்ஸர் அடித்த பாக்யராஜின் நடனத்துக்கும் கூட ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
தனது மகன் சாந்தனுவை சக்கரக்கட்டி படத்தில் நாயகனாக அறிமுகப்படுத்தினார் பாக்யராஜ். மகள் சரண்யாவும் பாரிஜாதம் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். ஆனால், அவர் தொடர்ந்து சினிமாவில் நடிக்கவில்லை.
தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் சாந்தனு, கடந்த ஆண்டு ப்ளூ ஸ்டார் படத்தில் தூள் கிளப்பியிருந்தார்.
‘மகன்களுக்கு அப்பாதான் முதல் ஹீரோ’ என்பார்கள். தன் மகனுக்கு மட்டுமல்ல சினிமாத்துறையில் இயக்கத்திலும் நடிப்பிலும்கூட சிறந்த ஹீரோவாக விளங்கியவர்தான் பாக்யராஜ்,
குறிப்பு: நடிகர் பாக்யராஜ் தன் மகன் சாந்தனு சிறுவயதாக இருந்தபோது எடுத்துக்கொண்டு புகைப்படம்.