அறிமுக இயக்குநர் சுபாரக் M இயக்கத்தில், மலைவாழ் மக்களின் நலன்களைப் பற்றிப் பேசும் ஹாரர் திரில்லர் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘நறுவீ’.
அழகு பாண்டியன் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், ஆகஸ்ட் 29ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கான கல்வி வேண்டும் என்கிற அக்கறையின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
மருத்துவம் படித்து முடித்துவிட்டு, தற்போது சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் டாக்டர் ஹரீஷ் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் வின்சு, வி.ஜே.பப்பு, பதினி குமார், ஜீவா ரவி, பிரவீணா, காதே, முருகானந்தம், பிரதீப், மதன் எஸ் ராஜா, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் சென்னை, ஊட்டி, குன்னூர் போன்ற இடங்களில் மொத்தம் 60 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து வசதிகள் இல்லாத மலை கிராமங்களில் பெரும் சிரமத்துக்கு இடையே ஒரு நல்ல கருத்தை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் இரவு பகல் பாராமல் படக்குழு பணியாற்றி இந்த திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறது.
எஃப்.ஐ.ஆர் திரைப்படத்தின் மூலம் சிறப்பான இசையை தந்த அஸ்வத், நறுவீ திரைப்படத்திற்கு சிறப்பான இசை பங்களிப்பு செய்திருக்கிறார். இவரின் இசையில் இத்திரைப்படத்தில் நான்கு பாடல்கள் இடம் பெற்றுள்ளன.