Take a fresh look at your lifestyle.

கசிந்த நயன்தாரா படக்காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி!

சிரஞ்சீவி – நயன்தாரா ஜோடியாக நடிக்கும் புதிய தெலுங்கு படத்தை அனில்புடி டைரக்டு செய்கிறார். இது, காமெடி படம். இன்னும் பெயர்  வைக்கவில்லை. சிரஞ்சீவியின் 157வதுபடம். இதனால் ‘மெகா -157’ என தற்காலிமாக பெயர் வைத்துப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

அண்மையில் கேரள மாநிலம் ஆலப்புழையில் முக்கிய காட்சிபடமாக்கப்பட்டது. சிரஞ்சீவியும், நயன்தாராவும் வெள்ளை நிற உடை அணிந்து படகு வீட்டில் பயணம் செய்யும் காட்சியை இயக்குநர் படமாக்கினார்.

ஷுட்டிங்கை உள்ளூர் யுடியூபர் வீடியோவில் படம் பிடித்து, தனது தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

சிரஞ்சீவி – நயன்தாரா சம்மந்தப்பட்ட இந்த காட்சி, டூயட் பாடலுக்கான முன்னோட்ட காட்சியாக இருக்கலாம் எனத் தெரிகிறது. படக்காட்சிகள் கசிந்தததால், படக்குழு அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

– பாப்பாங்குளம் பாரதி.