‘புஷ்பா-2’ படத்துக்குப் பிறகு அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை, நம்ம ஊர் அட்லி இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் இதை தயாரிக்கிறது.
ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கும் படம் இது. ‘ஜவான்’ படத்தைத் தொடர்ந்து அட்லி, சல்மான்கானை வைத்து படம் இயக்கத் திட்டமிட்டிருந்தார்.
அந்தப் படத்தில் மற்றொரு முக்கிய கேரக்டரில் ரஜினி அல்லது கமலை நடிக்க வைக்க முயற்சி செய்தார்.
இருவரும் மறுத்து விட்ட, நிலையில் அட்லிக்கு அல்லு அர்ஜுன் கை கொடுத்துள்ளார். அட்லி –அல்லு அர்ஜுன் கூட்டணி இணையும் புதிய படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகிறது.
“சர்வதேச தரத்துடன் இந்தியாவில் தயாராகும் ‘பான் வேர்ல்ட்’ படமாக இந்த படம் இருக்கும் – இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவில் தயாராகிறது” என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் இந்தப் படத்தின் போட்டோஷூட் மும்பை பாந்த்ராவில் உள்ள மெகபூப் ஸ்டூடியோவில் நடந்தது.
ஜூன் இறுதியில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் அல்லு அர்ஜுன், இந்தப் படம் பற்றி இப்படிக் கூறியுள்ளார்.
“இந்தியில் ஜவான் மற்றும் தமிழில் பல வெற்றிப் படங்களை டைரக்டு செய்துள்ள அட்லியுடன் முதன் முறையாக இணைகிறேன்.
அவர் சொன்ன ஐடியாவும் அவருடைய நம்பிக்கையும் எனக்குப் பிடித்திருந்தது. பல நிலைகளில் நாங்கள் ஒரேமாதிரியான எண்ணம் கொண்டவர்கள்.
இந்தப் படம், இந்திய சினிமாவுக்கு புதிய விஷுவல் ட்ரீட்டைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இந்திய உணர்வுகளுடன் கூடிய சர்வதேச திரைப்படமாக இது இருக்கும்” என்று அல்லு அர்ஜுன் தெரிவித்தார்.
– பாப்பாங்குளம் பாரதி.