Take a fresh look at your lifestyle.

அஜித்தின் வெரைட்டி கெட்டப்பை எதிர்நோக்கும் ரசிகர்கள்!

நாளை வெளியாகிறது ‘குட் பேட் அக்லி’

அஜித், திரிஷா ஜோடியாக நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். இந்தப் படம் நாளை வெளியாகிறது. படத்திற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களில் ‘குட் பேட் அக்லி’ படத்தின் முன்பதிவு மட்டும் ரூ.21 கோடி வசூலித்துள்ளது.

முதல் நாளுக்கான முன்பதிவு அரங்கு நிறைந்த காட்சிகளாக அமைந்துள்ளது. அதற்கடுத்து வெள்ளிக்கிழமை பாதியளவு அரங்குகள் நிறைந்துள்ளது.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் என்பதால் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல்’ ஆகிவிட்டது.

நான்கு நாட்களில் வசூல், 100 கோடி ரூபாயைக் கடந்துவிடும் என கணக்கிடப்பட்டுள்ளது. படத்தின் பட்ஜெட் 200 கோடி.

ஓடிடி, சாட்டிலைட் உரிமை மூலம் 100 கோடி வரை கிடைத்திருக்கும் என தெரிகிறது.

  • பாப்பாங்குளம் பாரதி.