Take a fresh look at your lifestyle.

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்!

தமிழ்த் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை

உலகம் போற்றும் வகையில் சமீபத்தில் சிம்பொனி இசை விருந்து படைத்த பண்ணைபுரம் தந்த இசைஞானி இளையராஜா அவர்களுக்கு தமிழ்த் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் சிறப்பு கவுரவம் செய்யப்பட்டது.

இதற்காக வடபழனி முருகன் கோயிலில் இளையராஜா அவர்களின் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்து கோயில் பிரசாதமும், சங்கம் சார்பில் அழகிய நினைவு பரிசையும் தலைவர் கவிதா, செயலாளர் கோடங்கி ஆபிரகாம், பொருளாளர் ஒற்றன் துரை, துணைத் தலைவர் பரத் உள்ளிட்ட நிர்வாகிகள் இசைஞானியை சந்தித்து வழங்கினர்.

அப்போது, “விரைவில் பாரத ரத்னா விருது கிடைக்க வேண்டும்” என்று அட்வான்ஸ் வாழ்த்துகளையும் தெரிவித்தபோது, அதைக் கேட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வழக்கமான சிரிப்பை பதிலாக தந்தார் இசைஞானி.