நடிகர் விஜய் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் இறுதிக் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து ஹெச். வினோத் இயக்கத்தில் 69வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் விஜய். மேலும் ஒரு படத்துடன் திரையுலகிலிருந்து வெளியேறி, முழு நேர அரசியல்வாதியாக பயணிக்க உள்ளதாக அறிவித்தார்.
கோட் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 69-வது படத்தை வெற்றிமாறன், கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், வெற்றிமாறன் ‘விடுதலை பாகம் 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். கார்த்திக் சுப்பராஜ் அண்மையில் சூர்யா படத்தை இயக்குவதாக அறிவித்தார்.
இந்நிலையில், விஜய்யை சந்தித்து இயக்குநர் ஹெச்.வினோத் கதை சொன்னதாகவும், அது விஜய்க்கு பிடித்துப் போனதாகவும் கூறப்பட்டது.
இதற்கிடையே விழா ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் வினோத், அந்தப் படத்தை இயக்க இருப்பதை உறுதி செய்தார். இதைப் பற்றிப் பேசிய இயக்குநர் வினோத் அது 200 சதவிகிதம் விஜய் படமாகவே இருக்கும்.
இந்தப் படத்துக்கு என்னை ஒப்பந்தம் செய்யும்போதே எல்லோரும் பார்க்கும் படமாக இருக்க வேண்டும் என்று விஜய் சொன்னார். அதனால் அரசியல் கட்சியையோ, அரசியல்வாதியையோ தாக்கும் படமாக இல்லாமல், 100 சதவிதம் கமர்ஷியல் படமாக இருக்கும் என்றார்.
தி கோட் பட ரிலீஸீக்குப் பிறகு இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.