Take a fresh look at your lifestyle.

அடுத்த ரம்ஜானில் வெளியாகும் ‘சிக்கந்தர்’!

இயக்குனர் ஏஆர் முருகதாஸ், சல்மான்கான் நடிக்கும் திரைப்படத்தை இயக்க உள்ளார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘எஸ்கே 23’ என்ற திரைப்படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கி வரும் நிலையில் அடுத்ததாக அவர் சல்மான்கான் படத்தை இயக்க இருக்கிறார் என்றும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஏஆர் முருகதாஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சல்மான் கானுடன் இணையும் திரைப்படத்திற்கு ‘சிக்கந்தர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளதோடு டைட்டில் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.

நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு ரம்ஜான் தினத்தில் இந்தப் படம் வெளியாகும் என்று ஏஆர் முருகதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு மிக விரைவில் தொடங்கும் என்றும், இந்தப் படத்தின் நாயகியாக த்ரிஷா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

– தேஜேஷ்

#இயக்குனர்_ஏஆர்_முருகதாஸ் #Director_AR_Murugadass #சல்மான்கான் #Salmankhan #டைட்டில் _போஸ்டர் #Title_Poster #சிவகார்த்திகேயன் #Sivakarthikeyan #சிக்கந்தர் #Sikandar #த்ரிஷா #Trisha