ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘எஸ்.கே 23’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் வில்லனாக ‘துப்பாக்கி’ படத்தில் நடித்த வில்லன் நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ்.. இயக்கத்தில் உருவான ‘துப்பாக்கி’ படத்தின் முக்கிய வில்லனாக வித்யூத் ஜாம்வால் நடித்திருந்தார்.
அந்த வகையில் தற்போது மீண்டும் ‘எஸ்கே 23’ படத்தில் வித்யூத் ஜம்வால் வில்லனாக நடித்திருப்பதாகவும் சிவகார்த்திகேயன் – வித்யூத் ஜாம்வால் ஆகிய இருவருக்கும் இடையிலான சண்டை காட்சி ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
– தேஜேஷ்