Take a fresh look at your lifestyle.

தனுஷ் படத்தின் சிறப்பு தோற்றத்தில் ஜிவி பிரகாஷ்!

தனுஷின் அடுத்த திரைப்படத்தில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் தனுஷ் ஒரு பக்கம் நடிகராக பிசியாக இருக்கும் நிலையில் தனுஷின் ஐம்பதாவது படமான ‘ராயன்’ படத்தை இயக்கி முடித்து விட்டு, தற்போது `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

தனுஷின் உறவினர் ஹீரோவாகவும், அனிகா சுரேந்திரன் நாயகியாகவும் நடிக்கும் இந்தப் படம் ஒரு இளம் காதலர்களின் வித்தியாசமான கதையம்சம் கொண்டது.

மேலும் இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வரும் நிலையில் இந்தப் படத்திற்காக நான்கு பாடல்களை அவர் கம்போஸ் செய்து முடித்து விட்டதாகவும் தனுஷ் நான்கு பாடல்களை எழுதி உள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் இன்றைய இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் அனைத்து பாடல்களும் சிறப்பாக வந்திருப்பதாகவும், எந்தப் பாடலை முதலில் ரிலீஸ் செய்வது என்பதில் எங்களுக்கே குழப்பம் இருக்கிறது என்றும் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் உள்ள ஒரு பாடலில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் ஜிவி பிரகாஷ் கூறியிருப்பதை அடுத்து இந்தப் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

– தேஜேஷ்