கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் மட்டுமில்லாமல் இந்தி மொழியிலும் நடித்து வருகிறார்.
முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகாவுக்கு தமிழ்நாட்டில் தனி ரசிகர் கூட்டம் உள்ளது.
கடந்த சனிக்கிழமை இவர், ஏர் விஸ்தாரா விமானத்தில் மும்பையில் இருந்து ஐதராபாத் சென்று கொண்டிருந்தார்.
அவருடன் நடிகை ஷ்ரத்தா தாசும் பயணித்தார்.

இந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு வானில் பறந்து கொண்டிருந்தது. புறப்பட்ட அரை மணி நேரத்தில் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
விமானம் குலுங்கியதால், பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். சிலர் அலறினர்.
உடனடியாக விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு, விமானத்தை மும்பை விமான நிலையத்துக்கே மீண்டும் திருப்பி பத்திரமாக தரை இறக்கினார்.
விமானத்தில் பயணித்த நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, ஷ்ரத்தா தாஸ் உள்பட அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டபோது உயிர் தப்பித்தது எப்படி? என்பது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோவுடன் ராஷ்மிகா விவரித்துள்ளார்.
ராஷ்மிகாவும், ஷ்ரத்தா தாசும், தாங்கள் அமர்ந்திருந்த இருக்கையின் முன்புள்ள சீட்டின் மீது அழுத்தமாக மிதித்தபடி அந்த போட்டோ உள்ளது.
‘இப்படித்தான் நாங்கள் விமான விபத்தில் இருந்து உயிர் தப்பினோம்” என ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.
-பாப்பாங்குளம் பாரதி.