Take a fresh look at your lifestyle.

கொண்டாடப்பட வேண்டிய குறும்படங்கள்!

நம் அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை எளிமையாக நிகழ்வுப்படுத்திக் காட்டுவதே குறும்படம். இந்த குறும்படங்கள் குறைந்தபட்ச கால எல்லை ஏதுமின்றி, அதிகபட்சமாக 40 நிமிடங்கள் வரை இருக்கலாம் என்கிறார்கள் திரைப்பட வல்லுநர்கள்.

இந்த குறும்படங்கள் எந்த வகையிலும், மொழியிலும் இருக்கலாம். ஆனால், சொல்ல வந்த கருத்தை அதிலிருந்து மாறாமல் மிகச் சுருக்கமாகக் கூற வேண்டும். அந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டு அனைத்து பிரிவிலும் வெற்றிப்பெற்ற குறும்படங்களில் சிலவற்றை மட்டும் இங்கே காணலாம்.

அடிமைத்தனம்:

எதார்த்த உலகின் சாதாரண வாழ்க்கையை வாழும் குழந்தையை தனியாக வளர்க்கும் ஒரு தாயின் கனவுப் பற்றிய குறும்படம் தான் அடிமைத்தனம்.

இக்கதையில், வேலைக்காரியாகப் பணிபுரியும் இளம் ஒற்றைத் தாய் மீனாவின் பயணத்தை இந்தக் கதை உள்ளடக்கியது. பல இடையூறுகள், கஷ்டங்கள் இருந்தாலும் தன்னால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்று நம்புகிறாள் மீனா.

ஆனால், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே இன்னும் பெரிய முரண்பாடுகள் நிலவும் சமூகத்தில் அவளால் தன் கனவுகளை அடைவதில் வெற்றி பெற முடியுமா? என்பதே  இந்தக் குறும்படத்தின் மையக்கரு.

விதை:

விவசாயக் குடுபத்தில் பிறந்தவர்கள் விஞ்ஞான உலகத்தில் சாதிக்க விரும்புகிறார்கள். ஆனால், இன்றைய இளைஞர்கள் ஏனோ விவசாயத்தின் எண்ணம் மறந்துபோனது, இதனை மையமாக வைத்து எடுத்த குறும்படம்தான் விதை.

இக்கதையில், விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஏழைப் பெண் பூங்கொடி, மருத்துவம் படிக்க நினைத்து, 12-வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று விவசாயம் செய்ய நினைக்கிறாள். அதோடு விவசாயத்தின் பெருமைகளையும் பேசுகிறாள்.

அதோடு, கோ கிரீன் (go green) போட்டிப் பற்றிப் பேசி, அதன் மூலம் விவசாயம் குறித்த எண்ணத்தை விதைப்பதே இந்தக் குறும்படத்தின் நோக்கம்.

விவசாயத்தை மேம்படுத்துவதை வலியுறுத்தும் இந்தக் குறும்படம் சென்னையில் முதல் பரிசு பெற்றது. பிளே பட்டன் குறும்பட விழாவில் 2வது பரிசு வென்றது. அதோடு, சென்னையில் நடைபெற்ற காஸ்ட்ரீ விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த முதல் 20 குறும்படங்கள் பிரிவிலும் தேர்ந்துதெடுக்கப்பட்டது.

காதல் 3 அடி:

அருண் பிரகாஷ் நடராஜன் இயக்கத்தில் வந்த காதல் 3 அடி ஒரு வித்தியாசமான காதல் குறும்படம். இப்படத்தில் காதல் ஒரு மனிதனை எந்த அளவிற்கு உயர்த்தும் என்பதை மூன்றடி ஜோடியை வைத்து எடுத்த காதல் படம்.

பாடலுடன் தொடங்கும் இக்கதை முடிவில் பேச்சியுடன் முடியும். இதில் இவர்களின் காதல், பெற்றோர் சாதி பார்ப்பதால் திருமணமாக மாற, அதன்பின் இவர்கள் இருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கையாக இருக்கிறது.

பாட்டு முடிவில் இருவருக்கும் ஒரு குழந்தை பிறக்கிறது. ஆனால் அது ஒரு மாற்றுத்திறனாளி குழந்தையா இருக்க, அப்போது அந்த 3 அடி அப்பாவின் உருக்கமான பேச்சு, பார்வையாளர்களை நெகிழ வைப்பதோடு, யோசிக்கவும் வைக்கிறது.

அப்பா சூப்பர் ஹீரோ வா இருக்க வேண்டியது இல்ல,
புல்லட்ல கூட்டிட்டு போக வேண்டிய தேவையே இல்ல,
அம்மா பேரன்ட்ஸ் மீடிங்க்கு வரனம்னுஇல்ல
ஃப்ரெண்ட்ஷ் அப்பா அம்மாவ கிண்டல் பணற சூழ்நிலையும் ஏற்படுத்தப்போவதும் இல்ல.
இது ஏதுவுமே இல்லலாம சந்தோஷம் மட்டும் இருக்கும் ஒரு அழகான குடும்பமாக கடற்கரையில் முடிகிறது இப்படம்.

இது வரையிலும் இவர்களுடைய உலகத்தை நம் பெரியதாக கவனித்ததில்லை. ஆனால் இந்த குறும்படத்தில் இவங்களுக்குள்ள இருக்கும் காதலை மிகவும் அழகாகச் சொல்லி இருக்கிறது இந்தக் காதல் 3 அடி குறும்படம்.

இக்குறும்படம் நிறைய விருதுகளை வென்றுள்ளன. அதில் ‘பிர்சமுண்டா வெற்றியாளர் 2023’ என்ற சிறப்பு ஜூரி விருது மிக முக்கியமானது.

பேசும் பொற்சித்திரமே:

வசனங்களின்றி காட்சிப்படுத்தலின் மூலமும் மிகச்சிறந்த படைப்பை உருவாக்கமுடியும் என்பதை குறிப்பிடுகின்றது பேசும் பொற்சித்திரமே என்ற இந்தக் குறும்படம்.

இக்கதையில், கதாநாயகன் செய்த தவறுக்காக தூக்கிலிட தீர்ப்பு முடிவாகிறது. அதற்கு முன் கணவருக்காக அவள் இரவு உணவு எடுத்துச் செல்கிறால். அப்போது அவர்கள் பேசும் மௌனமே இந்தக் குறும்படம்.

வாய் திறந்து பேச இயலாத அவளின் வலியை அவளின் கண்கள் பேசுகின்றன. நமது வலியை வார்த்தையில் சொல்வதைவிட நம் மௌனம் நன்கு உணர வைத்துவிடும். பின்னனி இசை அற்புதமாக கையாளப்பட்டிருக்கிறது. அவள் கண்ணில் இருந்த வலி, பார்வையாளர்கள் கண்களில் கண்ணீர் மல்கச் செய்து விடுகிறது.

அதனாலேயே இந்தக் குறும்படம் கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு, இயக்கம் போன்ற அனைத்துப் பிரிவிலும் விருதுகளை வென்றன.

இதுபோன்ற சிறந்த குறும்படங்கள் இன்னும் வெளிவர வேண்டும் என்பதே பார்வையாளர்களின் ஏக்கம். நல்ல படைப்புகள் கொண்டாடப்பட வேண்டும் என்பது படைப்பாளர்களின் எண்ணம். நிச்சயம் நல்ல படைப்புகளை இன்னும் எதிர்ப்பார்ப்போம்.

– ஆர். மகேஸ்வரி, டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கல்லூரி மாணவி.