Take a fresh look at your lifestyle.

மக்களின் மனதை வென்ற இந்த ஆண்டுப் படங்கள்!

இந்திய அளவில் தமிழ் சினிமாவில் மட்டுமே கடந்த நான்கு ஆண்டுகளாக 200க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன. அதைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டும் ஜனவரி மாதமும் பிப்ரவரி மாதமும் நிறையப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகியுள்ளன. அந்தப் படங்கள் எந்தெந்த வகையில் மக்களைச் சென்று அடைந்திருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.

2024 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள்;

லோக்கல் சரக்கு, தூக்குதுரை, சிங்கப்பூர் சலூன், ப்ளூ ஸ்டார், அயலான், கேப்டன் மில்லர், மிஷன்: சேப்டர் 1 (அச்சம் என்பது இல்லையே), மெர்ரி கிறிஸ்துமஸ், கும்பாரி, அரணம், கர்ஜனை, ஏஞ்சலினா, டெவில், வடக்குப்பட்டி ராமசாமி, இப்படிக்கு காதல்,
ஈமெயில், லவ்வர், லால் சலாம்.

இந்த இரண்டு மாதங்களில் 18 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிப்பெற்ற சிலப் படங்கள் குறித்துப் பார்ப்போம்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் பொங்கலுக்கு வெளிவந்த தமிழ் அறிவியல் கலந்த நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இதன் மொத்த வருவாய் 69.98 கோடியாகும்.

அடுத்ததாக தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘கேப்டன் மில்லர்’ பொங்கல் வெளியீடாக வெளிவந்த காவிய அதிரடித் திரைப்படம் ஆகும்.

இதன் வெளியீட்டு நாளான ஜனவரி 12 அன்று உள்நாட்டு பாக்ஸ் ஆஃபீஸில் 8.65 கோடி வசூலானது. இப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் இரண்டாவது நாளில் சிறிய வீழ்ச்சியைக் கண்டது.

இயக்குனர் எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் வெளிவந்த ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம், கிரிக்கெட் விளையாட்டின் மூலம் இளைய தலைமுறைகளை நல்வழிப்படுத்தி, சமூக ஒற்றுமைக்கு வலுவூட்ட முடியும் என்னும் நம்பிக்கையை விதைக்கும் விதமாக இயக்கப்பட்டுள்ளது.

எஸ்பி ராஜ்குமார் இயக்கத்தில் வெளிவந்த ‘லோக்கல் சரக்கு’ திரைப்படம், நகைச்சுவை மிகுந்த படமாக இயக்கப்பட்டுள்ளது.

கோகுல் இயக்கத்தில் வெளியான ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படமானது நகைச்சுவை திரைக்கதையில் தமிழ் சினிமா ரசிகர்கள் குடும்பங்களோடு ரசிக்கும் வகையில் உருவாகியுள்ளது.

ஒரு படித்த பட்டதாரி தனக்குப் பிடித்த வேலையான சலூன் வேலையைச் செய்ய பிரம்மாண்டமாக ஒரு சலூன் கடை வைக்கிறார். அதனால் இவர் சந்தித்த பிரச்சனைகள் தான் இப்படத்தின் கதை கருவாக அமைந்துள்ளது.

கார்த்திக் யோகி இயக்கத்தில் வெளிவந்த ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படமானது நகைச்சுவை மிகுந்த படமாக அமைந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புப் பெற்றுள்ளது.

பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் வெளிவந்த ‘லவ்வர்’ திரைப்படமானது காதலில் ஏற்படும் பிரச்சனைகளை கூறும் விதமாக அமைந்துள்ளது.

இந்த உலகத்தில் காதல் இல்லாமல் எதுவுமே இல்லை, அந்த காதலும் அளவிற்கு மீறி, அதீத காதலாக மாறும் போது, நான் உனக்கு முக்கியம் இல்லையா, யார் கூடயும் பேசாதே, எனக்கு மட்டும் தான் நீ என காதல் ஆரம்பிக்கும் போது பேசும் வார்த்தைகள் காலம் செல்ல செல்ல கசந்து விடுகிறது. இதை லவ்வர் படத்தின் மூலம் அழகாக சொல்லி இருக்கிறார்.

இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் ஒரு கோடி எனக் கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் நடித்த லால் சலாம் படத்தோடு இந்த திரைப்படம் வெளியானதே மிகப்பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்திற்கு காதலர்கள் மத்தியில் நல்ல விமர்சனம் வந்துகொண்டு இருப்பதால், வரும் நாட்களில் இப்படம் கணிசமான வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்த ‘லால் சலாம்’ திரைப்படமானது கிரிக்கெட் விளையாட்டு சார்ந்த திரைக்கதையாக அமைந்துள்ளது.  அது மட்டுமல்லாமல் சமூக கருத்துக்கள் உள்ளடக்கியப் படமாக அமைந்துள்ளது.

– மூ. நிவேதா, மாணவி, டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கல்லூரி.