நடிகர் ரஜினிகாந்த்தின் தலைவர் 171 திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின், படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் தலைவர் 171 படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
– தேஜேஷ்