Take a fresh look at your lifestyle.

விஜயின் கடைசி படத்தை இயக்கப் போவது யார்?

‘இளையத் தளபதி’ விஜயின் அரசியல் பிரவேசம் வெகு நாட்களாக எதிர்பார்க்கப்பட்டது.

ரசிகர்களை காத்திருக்க வைக்காமல் ‘தமிழக வெற்றி கழகம்’ எனும் பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கி விட்டார்.

இப்போது விஜய், வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

அந்தப் படத்துக்கு ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (தி கோட்) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இது விஜய்க்கு 68-வது திரைப்படம்.

‘இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு முழு மூச்சாக அரசியலில் குதித்து விடுவேன்’ என அவர் தெளிவாகச் சொல்லி விட்டார்.

இதனால் விஜய்யின் 69-வது படம் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் இயக்குநர் யார்? தயாரிப்பாளர் யார்? கதாநாயகி யார்? என கோடம்பாக்கத்தில் விவாதம் நடந்து வரும் நிலையில், அந்தப் படத்தை இயக்க பலத்த போட்டி நிலவுகிறது.

விஜய்-69 படத்தை எச்.வினோத் இயக்க உள்ளார். இது முழுக்க முழுக்க அரசியல் களத்தை மையமாகக் கொண்ட படமாக இருக்கும்’ என தகவல் வெளியானது.

இப்போது அந்தப் படத்தை இயக்குவோர் பட்டியலில் கார்த்திக் சுப்புராஜ், அட்லீ, ஷங்கர், வெற்றிமாறன் ஆகியோரின் பெயர்களும் உள்ளன.

தனது 69-வது படத்தின் இயக்குநர் என்பதை விஜய் ஏற்கனவே முடிவு செய்துவிட்டார். உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள விஜய்க்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘வேட்டையன்’ படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நேற்று அவர் ஐதராபாத் புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவரை சந்தித்த செய்தியாளர்கள், விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து வினா எழுப்பினர்.

‘அவருக்கு எனது வாழ்த்துகள்’ என ரஜினி பதிலளித்தார்.

– பாப்பாங்குளம் பாரதி.