Take a fresh look at your lifestyle.

கோடை விடுமுறையில் வெளியாகும் ‘தங்கலான்’!

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘தங்கலான்’ திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகும் என முதலில் கூறப்பட்டது.

அதன் பின்னர் இந்தப் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

ஆனால், தற்போது ஜனவரி 26ல் வெளியாகவில்லை. தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடையாததால் மேலும், சில மாதங்கள் தேவைப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

எனவே ‘தங்கலான்’ படத்தை வரும் கோடை விடுமுறையான ஏப்ரல், மே மாதங்களில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

– தேஜேஷ்