Take a fresh look at your lifestyle.

யாஷிக்கு ஜோடியாக சாய் பல்லவி!

பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎஃப் படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, யாஷ் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு, நாளை வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தை மலையாள நடிகை கீது மோகன் தாஸ் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கோவா பின்னணியில் உருவாகும் மாஃபியா கதையான இதுவும் பிரம்மாண்ட ஆக்ஷன் படம் என்கிறார்கள்.

பெங்களூருவைச் சேர்ந்த கே.வி.என் புரொடக்ஷன்ஸ் இதை தயாரிக்கிறது. யாஷின் 19 வது படமான இதில், அவர் ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாகவும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் தெரிகிறது.