Take a fresh look at your lifestyle.

90-ஸ் திரைப்பிரபலங்களின் ரீ யூனியன்!

தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணியில் இருந்த திரைப்பிரலங்கள் சமீபத்தில் கோவாவில் ஒன்று கூடி சந்தித்துள்ளனர்.

இதில், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், ஷங்கர், லிங்குசாமி, மோகன் ராஜா, பிரபு தேவா, நடிகர் ஜெகபதி பாபு, ஸ்ரீகாந்த், நாயகிகள் சிம்ரன், மீனா, சங்கவி, மாளவிகா, சங்கீதா, ரீமா சென், மகேஸ்வரி, சிவரஞ்சனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பில் தங்கள் திரைப்பட நினைவுகளைப் பேசி மகிழ்ந்தனர். இதில் அனைவரும் ஒரே நிற உடைகள் அணிந்து பங்கேற்றனர்.

இது தொடர்பாக நடிகை சிம்ரன் பகிர்ந்த வீடியோவில், அனைவரும் ‘தால்’ படத்தின் பாடலுக்கு நடனமாடும் வீடியோ காட்சியும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இயக்குநர் மோகன் ராஜா, பிரபுதேவாவுடன் எடுத்த புகைப்படத்தை #19YearsOfUnakkumEnakkum என்ற ஹாஷ்டேக்குடன் பகிர்ந்துள்ளார்.

தென்னிந்திய ரசிகர்கள் தங்கள் விருப்பமான நட்சத்திரங்களை மீண்டும் ஒன்றாக இணைந்துள்ள இந்தப் புகைப்படத்திற்கு பெரிதும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.