Take a fresh look at your lifestyle.

7 பாப்டா விருதுகளை வென்ற ‘ஓப்பன்ஹெய்மர்’!

சர்வதேச அளவில் ஆஸ்கருக்கு அடுத்த கவுரவ விருதாக பிரிட்டிஷ் திரைப்பட அகாடமியின் பாப்டா சினிமா விருதுகள் கருதப்படுகின்றன. 77-வது பாப்டா விருதுகள் வழங்கும் விழா லண்டனில் நடந்தது.

இதில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘ஓப்பன்ஹெய்மர்’ ஹாலிவுட் படம் 7 பாப்டா விருதுகளை அள்ளியது.

சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு என 7 பிரிவுகளின் கீழ் விருதுகள் பெற்றது.

அணுகுண்டு விஞ்ஞானியான ஓப்பன்ஹெய்மர் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகி இருந்தது. சிறந்த நடிகருக்கான பாப்டா விருதை சிலியன் மர்பியும், சிறந்த இயக்குனருக்கான விருதை கிறிஸ்டோபர் நோலனும் பெற்றுக் கொண்டனர்.

இதற்கு அடுத்த படியாக ‘புவர்திங்க்ஸ்’ திரைப்படம் சிறந்த நடிகை, சிறந்த பேக்கப் மற்றும் சிகையலங்காரம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த தயாரிப்பு என 5 விருதுகளைப் பெற்றது.

பொதுமக்களால் தேர்வு செய்யப்பட்ட ரைசிங் ஸ்டார் விருதை ‘ப்ரூஸ்’ படத்திற்காக மியா பெக்கன்னாவும் சிறந்த துணை நடிகைக்கான விருதை ‘தி ஹோல்ட வோர்ஸ்’ படத்திற்காக டாவின் ஜாயும் பெற்றனர்.

-நன்றி: தினத்தந்தி.