சென்னை:
வடிவேலுவின் தந்தை வேலராமமூர்த்தி பைரவர் கடவுள் மீது ஆதிக பக்தி வைத்திருப்பதால், அவர் பைரவர் கோவிலுக்கு சென்று வணங்கும்போது அங்கு ஒரு நாய் அவருக்கு கிடைக்கிறது. இந்த சூழ்நிலையில் அந்த நாயை தன் வீட்டிற்கு எடுத்து வந்து வளர்க்கிறார். அந்த நாய் வந்த அதிர்ஷ்டம் வேல.ராம மூர்த்தி குடும்பம் எதிர்பாராதவிதமாக பெரிய பணக்கார குடும்பம் ஆகிவிடுகிறது. இந்த சூழலில் அந்த நாய் திடீரென்று தொலைந்து விடுகிறது. அந்த நாய் தொலைந்த பிறகு வடிவேல் குடும்பத்தினர் வறுமையில் தவிக்கிறார்கள். இதனால் கஷ்டமான நிலைக்கு தள்ளப்பட்ட வடிவேலு நல்ல ஜாதி நாய்களை திருடி, அதை நல்ல விலைக்கு விற்று குடும்பத்தை நடத்துகிறார்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஆனந்த் ராஜின் நாயை வடிவேலு கடத்திவிடுகிறார். பெண்களை கடத்தி பணம் சம்பாதிக்கும் ஆனந்த் ராஜ், தனது நாயை திருடிய வடிவேலுவை மிரட்டி, அந்த நாயை மீட்க முயலுகிறார். இந்நிலையில் வடிவேலு வீட்டில் இருந்த அதிர்ஷ்ட நாயை அவரது வீட்டு வேலைக்காரன் திருடி சென்று விட்டதால்தான் தங்களுக்கு இந்த வறுமை நிலை ஏற்பட்டது என்று அவரது பாட்டி சச்சு சொல்ல, திருடப்பட்ட அந்த நாயை வடிவேலு கண்டுபிடிக்க முயல்கிறார். அவர் அந்த நாயை கண்டுபிடித்தாரா? இல்லையா? ஆனந்த்ராஜிடம் இருந்து மீண்டாரா? என்பதுதான் “நாய் சேகர் ரிட்டன்ஸ்” படத்தின் மீதி கதை.
காமெடி கதாநாயகனாக பத்து வருடங்களுக்குப் பிறகு நடிப்பு களத்தில் இறங்கியிருக்கும் வடிவேலு, இப்படத்தின் ஆரம்பித்திலிருந்தே தனது வழக்கமான பாணியில், சிரிக்க வைக்க. தன் நடிப்பாலும் வசனங்களாலும் ‘தான் ஒரு காமெடி கலைஞன்’ என்பதை மீண்டும் நிரூபித்து காட்டியிருக்கிறார். இருந்தாலும் சில காட்சிகளில் வடிவேலு தன் உடல் மொழியால் பல சேஷ்டைகளுடன், காமெடி செய்தாலும் ரசிகர்கள் மத்தியில் சிரிப்பு வரவில்லை. வடிவேலு வந்து நின்றாலே சிரிக்கும் நம் ரசிகர்கள், பல இடங்களில் சிரிக்காமல் இருப்பது பெரிய ஏமாற்றம்தான். முன்பு இருந்த வடிவேலுவின் சிறப்பு குணாதிசயங்கள் இந்தப் படத்தில் இல்லை. இதை வடிவேலு கவனத்தில் எடுத்து கொல்ல வேண்டும். இருந்தாலும்அனைத்து ரசிகர்களையும் சிரிக்க வைத்து தன் காமெடி நடிப்பால் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
வடிவேலுவின் காமெடியை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மத்தியில் பெண்களை கடத்தும் வில்லனாக வரும் ஆனந்தராஜ் வரும் காட்சிகள் அனைத்தும் சிரிக்க வைக்கிறது.தனது அனுபவ நடிப்பால் அவரது காட்சிகளை கலகலப்பாக நகர்த்த வைக்கிறார் ஆனந்தராஜ். படத்தில் ரெடின் கிங்ஸ்லி வரும்போதெல்லாம் ரசிகர்கள் உற்சாகமாகி சிரித்து கைத்தட்டஆரம்பித்து விடுகிறார்கள்.
சிவாங்கி, யூடியூபர் பிரசாந்த், ராமர், முனிஷ்காந்த், பாலா, தங்கதுரை, பூச்சி முருகன், ஷிவானி என படத்தில் பல காமெடி நடிகர்கள் இருந்தாலும் காமெடி காட்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல், இருப்பதால், அவர்களுக்கு இயக்குனர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கின்றனர்.
சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவில் அனைத்து காட்சிகளும் இயற்கை எழில் மிகுந்த கண்களுக்கு கலர்புல்லாக இருப்பதோடு, பிரமாண்டமாகவும் பல காட்சிகளை படமாக்கி இருப்பதை பாராட்டாமல் இருக்க முடியாது.
ஜாதி நாய்களை கடத்தி பணக்காரனாக நினைக்கும் நாயகன் என்ற ஒரு கதையை மையமாக வைத்து, அதற்கு காமெடியாக திரைக்கதை அமைத்து படம் முழுவதும் ரசிகர்களை சிரிக்க வைத்து தெறிக்க விட்டுள்ளார் இயக்குனர் சுராஜ். இப்போதுள்ள வடிவேலுவின் முழு திறமைகளை கச்சிதமாக காட்டி நடிக்க வைத்துள்ளார். முதல் பாதியில் படம் சற்று தொய்வை ஏற்படுத்தினாலும் இரண்டாம் பாதியில் அனைவரையும் ரசிக்கும் படியாக இயக்கி இருக்கிறார் சுராஜ்.
மொத்தத்தில் ,இயக்குனர் சுராஜ் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் கதையை நகைச்சுவையாக சொல்லி இருப்பதால் கண்டிப்பாக பார்க்கலாம்.
திரைநீதி செல்வம்.