Take a fresh look at your lifestyle.

தளபதி விஜய் ஜவான் படத்தில் நடித்திருக்கிறாரா.. முற்றுப்புள்ளி வைத்த அட்லீயின் பேட்டி

101

தமிழ் சினிமாவில் தெடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்த அட்லீ தற்போது பாலிவுட்டில் அறிமுகம் ஆகும் ஜவான் படம் நாளை ரிலீஸ் ஆகிறது.

நயன்தாரா ஹீரோயினாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்து இருக்கும் இந்த படத்தில் ஷாருக் கான் அப்பா-மகன் என இரண்டு ரோல்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் ரிலீஸ் ஆன படத்தின் ட்ரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் தளபதி விஜய்யும் இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக ஒரு தகவல் கடந்த பல மாதங்களாகவே பரவி வருகிறது. அது பற்றி படக்குழுவும் எந்த விளக்கமும் கொடுக்காமல் இருந்தது.

இந்நிலையில் அட்லீ தற்போது கொடுத்திருக்கும் பேட்டியில் விஜய் ஜவான் படத்தில் நடிக்கவில்லை என தெரிவித்து இருக்கிறார். அவர் நடிப்பதாக இருந்தால் நானே அதை அறிவித்து இருப்பேன் எனவும் அட்லீ கூறி இருக்கிறார்.