Take a fresh look at your lifestyle.

‘கோட்’ புரமோஷனுக்கு கட்சிப் பெயரைப் பயன்படுத்தக் கூடாது!

விஜய் உத்தரவு

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கோட் படத்தில் நடிகர் விஜய் அவருடைய போர்ஷன் நடித்து முடித்துள்ளார்.  இந்தப் படம் அடுத்த மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இதற்கான புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தி கோட் பட புரமோஷனில் தான் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என மக்கள் இயக்க நிர்வாகிளுக்கும், ரசிகர்களுக்கும் நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து தி கோட் படத்துக்காக தயாரிக்கப்படும் பேனர்களில் தமிழக வெற்றிக் கழகம் பெயரை தவிர்த்து, தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரை நிர்வாகிகள் பயன்படுத்தி வருகின்றனர் என சமூக வலை தளங்களில் இந்தச் செயல் வைரலாகி வருகிறது.