பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் ‘தங்கலான்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திரம் தினத்தன்று வெளியானது.
ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான ‘தங்கலான்’ ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வசூலிலும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இப்படத்தின் பட்ஜெட் 100 கோடி ரூபாய் என்று கூறப்படும் நிலையில் நேற்று வரை இத்திரைப்படம் தற்போது வரை 50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இத்திரைப்படம் 19-ம் நூற்றாண்டில், கோலார் தங்க வயலில் தங்கம் எடுக்க அழைத்துச் செல்லப்படும் தமிழக மக்களின் வாழ்க்கை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது.
இந்தப் படத்தின் கதை, இயக்கம், நடிகர்களின் அற்புதமான நடிப்பு, இசை ஆகியவற்றுக்காக ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.
அதேபோல் சில எதிர்மறையான விமர்சனங்களும் வந்துகொண்டே இருக்கின்றது.
இருப்பினும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் இத்திரைப்படம் விரைவில் 100 கோடி வசூல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.