Take a fresh look at your lifestyle.

தங்கலான் படக்குழுவுக்கு விருந்து வைத்த விக்ரம்!

நடிகர் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான்  படம் இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பிலிருந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.

கலவையான விமர்சனங்களைப் பெறும் தங்கலான் இதுவரை உலகளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கிலும் இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இதனிடையே ஆகஸ்ட் 30 ஆம் தேதி இந்தியிலும் இப்படம் வெளியாவதால், இந்தாண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக தங்கலான் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் நடிகர் விக்ரம் படக்குழுவுக்கு விருந்து வைத்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளன.