Take a fresh look at your lifestyle.

அஜித்துக்கு வில்லனாகும் எஸ்.ஜே.சூர்யா!

நடிகர் அஜித்தின் ஏகே-63 படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா, அரவிந்த்சாமி நடிக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ப்ரியா பவானி சங்கர், ரெஜினா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்படிப்பு முடிந்ததும், ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் ஏகே 63 திரைப்படத்தில் அஜித் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா, அரவிந்த்சாமி மற்றும் தெலுங்கு முன்னணி நடிகரிடம் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

– தேஜேஷ்