நடிகர் விமலின் தேசிங்கு ராஜா-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
எழில் இயக்கத்தில் நடிகர் விமல் நடித்த தேசிங்கு ராஜா திரைப்படம் கடந்த 2013ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இப்படத்தின் 2ம் பாகம் உருவாகிறது. இதில், பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா, புகழ், ரவி மரியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
– தேஜேஷ்