தமிழ் சினிமாவில் இன்றைய நிலவரப்படி, இளம் நடிகைகளில் முன்னணி இருப்பவர் கீர்த்தி சுரேஷ். ஆனால் அவருக்கும் இப்போது வெற்றிப் படம் கொடுத்தாக வேண்டிய கட்டாயம்.
இதனால் கீர்த்தி சுரேஷூக்கு பதிலாக வேறு இளம் கதாநாயகியைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் இங்குள்ள இளம் இயக்குநர்கள்.
இந்த தேடலில் முக்கிய தேர்வாக மாறியிருக்கிறார் கீர்த்தி ஷெட்டி. இதனால் இப்போது இந்த ஜூனியர் கீர்த்திக்கும், சீனியர் கீர்த்திக்கும்தான் யார் உசத்தி என்ற போட்டி கடுமையாகி இருக்கிறதாம்.
சீனியர் கீர்த்தி சுரேஷூக்கு இப்போதைய தேவை ஹிட் படங்கள். அதே பிரச்சினையில்தான் ஜூனியர் கீர்த்தி ரெட்டியும் இருக்கிறார். தெலுங்கில் நடித்த முதல் இரண்டுப் படங்கள் வெற்றி பெற்றன. ஆனால் அடுத்தடுத்த படங்கள் எதுவும் எடுப்படவே இல்லை.
இதனால் தமிழ் சினிமா பக்கம் வந்த கீர்த்தி ஷெட்டி, சூர்யாவுக்கு ஜோடி என்றதும் எதுவும் சொல்லாமல் பாலா இயக்கத்தில் உருவாக இருந்த ‘வணங்கான்’ படத்தில் ஒப்பந்தமானார்.
ஆனால் சூர்யா – பாலா பஞ்சாயத்தினால், சூர்யா எஸ்கேப் ஆக, சூர்யா இல்லையென்றதும் கீர்த்தியும் கழன்று கொண்டார்.

கொஞ்ச நாளில் லிங்குசாமி இயக்கத்தில் நடித்த ‘வாரியர்’ படம் கைக்கொடுக்குமென ஜூனியர் கீர்த்தி ஆசைப்பட்டார். அந்த ஆசை நிறைவேறவில்லை. ஆனால் இப்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகள் ஜூனியருக்கு கிடைத்திருக்கின்றன.
ஜெயம் ரவியுடன் நடிக்கும் ஃபேண்டஸி படம் ‘ஜீனி’, லவ் டுடே புகழ் பிரதீப் ரங்கநாதனுடன் ‘லவ் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி’, அடுத்து இப்போது கார்த்தியுடன் ‘வா வாத்தியார்’ என கைவசம் மூன்று படங்கள் வைத்திருக்கிறார் ஜூனியர் கீர்த்தி.
இதுதான் சீனியர் கீர்த்தியை ஆட்டம் காண வைத்திருக்கிறதாம். இந்தப் போட்டியில் தமிழ் சினிமாவில் நிலவும் கதாநாயகி பஞ்சத்தைப் போக்குவதில் வெற்றி பெற போவது சீனியரா ஜூனியரா என்பது இனிதான் தெரியும்.
இரா. ரவிஷங்கர்