Take a fresh look at your lifestyle.

பிரபுவும் கார்த்திக்கும் உருவாக்கிய ஓயாத அலை!

சினிமாத் துறையில் இருப்பவர்களின் வாரிசுகள் சினிமாவுக்கு வருவது என்பது ஒன்றும் அதிசயம் இல்லை. ஒரு சாதாரண மனிதன் சினிமாவில் நுழைந்து நிலைபெறுவது என்பது நிச்சயம் உலக சாதனை தான்.

வாரிசுகளுக்கு இந்தப் பிரச்சினை இல்லை. ஈசியாக நுழைந்து விடலாம். ஆனால், நிலைபெறுவது எளிதில்லை.

நடிகர் பிரபு, தான் நிலைபெறுவதற்கு தன் தந்தையான சிவாஜி உதவினாலும் பிரபு தன்னை மெருகேற்றிக் கொண்டதும் முக்கிய காரணம்.

அதனால்தான் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுக்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் entertainer ஆக நம்மை மகிழ்வித்து வருகிறார் பிரபு.

அடுத்த வாரிசு நடிகர் – பாரதிராஜாவால் களமிறக்கப்பட்ட கார்த்திக். இவரும் பிரபுவின் காலத்திலேயே அறிமுகமாகி தமிழ் சினிமாவின் மென்மையைப் பாதுகாத்தார்.

அடுத்த தலைமுறை வாரிசு நடிகர்களில் முதன்மையானவர் சிலம்பரசன். தந்தையின் சகல கலைகளையும் சிறுவயது முதலே பயிற்றுவிக்கப்பட்டார். இவரும் தற்போது வரை சில ஹிட் படங்களைத் தந்து வருகிறார்.

அடுத்து சிவக்குமாரின் இரண்டு மகன்களான சூர்யாவும், கார்த்தியும் சினிமாவில் இறங்கி சினிமாத் துறை தான் அதிகமாக அள்ளி தரும் துறை என புரிய வைத்திருக்கிறார்கள்.

அதற்கு பிறகு வாரிசுக்கு வாரிசுகளும் வந்தார்கள். இப்போது புதிய வாரிசுகளும் களம் இறங்கியுள்ளதையும் பார்க்க முடியும்.

அதேபோல், இயக்குநர் சந்திரசேகரின் மகன் விஜய், நம்பர் ஒன் நடிகராக இன்றும் வலம் வருகிறார்.

நிறைய புகழ் இருந்தும் வாய்ப்புகள் இருந்தும் சினிமாத் துறையில் தனது வாரிசை இறக்காத, இழக்காத நடிகரும் நம்ம ஊர் ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர்.

இவரது மகன் விஜயசங்கர் சினிமாத் துறையிலிருந்து விலகி கண் மருத்துவம் பயின்று, தற்போது கண் அறுவை சிகிச்சை மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். 

இன்னும் சொல்வதற்கு எத்தனையோ நடிர்கள் இருந்தாலும், முதலில் அறிமுகமான வாரிசு நடிகர்களாகிய பிரபுவும் கார்த்திக்கும் உருவாக்கிய அலைகளை வேறு எந்த வாரிசு நடிகர்களாலும் உருவாக்க முடியவில்லை என்பது நிதர்சனம்.

– நன்றி முகநூல் பதிவு