Take a fresh look at your lifestyle.

வெளியானது ‘சர்ஃபிரா’ டிரைலர்: சிறப்புத் தோற்றத்தில் சூர்யா!

சூர்யா நடித்த ‘சூரரைப்போற்று’ திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் கடந்த சில மாதங்களாக இந்தப் படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பில் தமிழில் ‘சூரரைப் போற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் டைட்டில் ‘சர்ஃபிரா’ என்றும் இந்தப் படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் இரண்டு நிமிடத்திற்கு மேலான டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த டிரைலரில் உள்ள காட்சிகளைப் பார்க்கும்போது கிட்டத்தட்ட ‘சூரரைப்போற்று’ படத்தில் உள்ள காட்சிகள் தான் உள்ள நிலையில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் ஒரு சில நொடிகள் வரும் காட்சியும் இந்த டிரைலரில் உள்ளது.

தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘சூரரைப்போற்று’ திரைப்படம் இந்தியிலும் வெற்றி பெறும் என்பது இந்த டிரைலரைப் பார்க்கும்போதே தெரிகிறது.

அக்ஷய் குமார், பரேஷ் ராவல், ராதிகா மதன், சீமா பிஸ்வாஸ், சரத்குமார், சவுரப் கோயல், கிருஷ்ணகுமார் பாலசுப்பிரமணியன் உள்பட பலரது நடிப்பில் உருவான இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

– தேஜேஷ்