Take a fresh look at your lifestyle.

வைரலாகும் ப்ரியா அட்லியின் குறும்பட வீடியோ!

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன், `மெரினா’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன், அட்லியின் மனைவி ப்ரியா அட்லியுடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு குறும்படத்தில் நடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் மற்றும் ப்ரியா அட்லி ஆகிய இருவரும் `360 டிகிரி’ என்ற குறும்படத்தில் நடித்துள்ளனர். இந்தக் குறும்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியா அட்லி நடித்த காட்சிகள் கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே சில தொலைக்காட்சி தொடர்களில் ப்ரியா அட்லி நடித்திருந்த நிலையில் தற்போது அவர் சிவகார்த்திகேயனுடன் குறும்படத்திலும் நடித்துள்ளார் என்பது பலருக்கு தெரிய வந்துள்ளது.

– தேஜேஷ்