Take a fresh look at your lifestyle.

‘அம்பி’ மூலம் நாயகனாகும் ரோபோ சங்கர்!

மேடைக் கலைஞராக தனது கலைப் பயணத்தைத் துவக்கி, தொடர்ந்து சின்னத்திரை, பிறகு வெள்ளித்திரையில் காமெடியனாக கலக்கிக் கொண்டிருக்கும் ரோபோ சங்கர், ‘அம்பி’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அஸ்வினி சந்திரசேகர் நடித்துள்ளார்.

ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, மோகன் வைத்யா, கோவை பாபு, நமோ நாராயணா, மீசை ராஜேந்திரன், சேரன்ராஜ், மிப்புசாமி, ராதாமா, ஷர்மிளா, ஆர்த்தி, வித்யா, ராணி பாட்டி என ஏராளமான நட்சத்திரப் பட்டாளங்கள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

வெற்றிவேல் முருகன் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கன்னடத்தில் அகோரா, நெகிழா தர்மா, மகளே, Tt #50 படங்கள் உட்பட ஏராளமான படங்களுக்கு இசையமைத்திருக்கும் A.B. முரளிதரன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

நா. ராசா பாடல் வரிகளை பிரபல இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி மற்றும் பிரபல பாடகர்கள் சைந்தவி, சத்யபிரகாஷ், டிரம்ஸ் சிவமணி, தேவகோட்டை அபிராமி ஆகியோர் பாடி இருக்கிறார்கள்.

கலை இயக்குனராக அன்பு பணியாற்றியுள்ளார்.

வைலன்ட் வேலு ஸ்டண்ட் இயக்குனராகவும், கார்த்திக் நடன இயக்குனராகவும் பணியாற்றியுள்ளனர்.

தயாரிப்பில்  T2 மீடியா F. பிரசாந்தி பிரான்சிஸ், கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் பாஸர் J எல்வின்.

கதையின் நாயகன் நிஜத்தில் அம்பியாக, அப்பாவியாக, பயந்தாங்கோலியாக இருக்க அவனைச் சுற்றி உள்ளவர்கள் ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் அவனால் தான் அனைத்தும் நடந்தது அவன் பெரிய வீரன், பெரிய அதிர்ஷ்டசாலி என்று நம்ப ஆரம்பிக்கிறார்கள்.

இப்படி மாட்டிக் கொண்ட நாயகன் எப்படி அவர்களிடம் இருந்து தப்பித்தார், இறுதியில் அம்பியாக இருந்தாரா இல்லை அந்நியனாக மாறினாரா என்பதை குடும்பத்துடன் பார்க்கக்கூடிய நகைச்சுவை நிறைந்தப் படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

கதைப்படி கதையின் நாயகன் திருமணம் ஆகாத 40 வயது மதிக்கத்தக்க கதாபாத்திரம் என்பதால் அதற்கு ஒரு காமெடியன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று ரோபோ சங்கரை நடிக்க வைத்துள்ளனர்.  

இதனிடையே, இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கமலஹாசன் இன்று வெளியிட்டார்.