Take a fresh look at your lifestyle.

சவுதி அரேபிய பட விழாவில் அமிர் கானுக்கு கௌரவம்!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர் கான். இவருக்கு சவுதி அரேபிய திரைப்பட விழாவில் மிக உயரிய விருது அளிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா ஜெட்டாவில் டிசம்பர் 5-ம் தேதி முதல் டிசம்பர் 14-ம் வரை செங்கடல் திரைப்பட விழா நடைபெறுகிறது.

இதன் துவக்க விழாவில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்து சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராக அழைப்பட்டிருந்தனர்.

இந்த விழாவில் இந்திய நடிகர் அமிர் கானும் அழைப்பின் பேரின் கலந்துகொண்டார். இந்த விழாவில் அமிர் கானுடன் கரீனா கபூர் வில் ஸ்மித், வின் டீசல். ஸ்பைக் லீ ஆகிய பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.

இந்த விழாவில் செங்கடல் திரைப்பட விழாவில் உயரிய விருதான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட எமிலி பிளண்ட், எகிப்திய நடிகை மோனா ஜகி உடன் அமிர் கானுக்கு கௌர விருது அளிக்கப்பட்டது.

நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அமிர்கான் பல சாதனைகளை படைத்துள்ளார். இந்தியாவிலே அதிகம் வசூலித்த படமாக அவரது படங்களே இருக்கின்றன.

தங்கல், பிகே, 3 இடியட்ஸ், லகான், ரங் தே பசாந்தி ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக சினிமாவில் அமிர் கானின் பங்களிப்பைப் பாராட்டும் விதமாக இந்தக் கௌரவம் செய்யப்பட்டாதாக விழாக் குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

30 ஆண்டுக்களுக்கான கௌரவம்

இதுகுறித்து பேசிய அமிர் கான், இங்கு வந்திருப்பது மிகவும் கௌரமாக இருக்கிறது.

இத்தனை ஆண்டுகளாக நான் நடித்த படங்களினை பாராட்டும் விதமாக இது நடந்திருப்பதற்கும் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

கடந்த 30 ஆண்டுகளாக என்னுடைய சினிமாப் பயணத்தில் என்னுடன் பணியாற்றிய பல எழுத்தாளர்கள், இயக்குநர்களுக்கு நான் எனது நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

சவுதி அரேபியாவில் வந்து செங்கடல் திரைப்பட விழாவில் பங்கேற்பது மிக்க மகிழ்ச்சியாக கருதுகிறேன். இது அற்புதமாக இருக்கிறது. மீண்டும் இங்கு வந்து இந்த நாட்டின் கலாச்சாரத்தை நெருக்கமாக அனுபவிக்க விரும்புகிறேன்.

சாதனை படைப்பது எப்படி?

நான் விரும்பியதை படமாக எடுக்க, நடிக்க, தயாரிக்க எனக்கு சுதந்திரம் இருக்கிறது. தயாரிப்பதுதான் சற்று கடினமான வேலையாக இருக்கிறது.

எந்தப் படமும் எளிதானது இல்லை. எல்லா படங்களையும் பதற்றத்துடனே தேர்வு செய்வேன்.

பல இயக்குநர்களின் ரிஸ்க் எடுக்கிறார்கள். அவர்களைப் பார்த்துதான் நானும் அந்தமாதிரியான முடுவுகளை எடுக்க ஆரம்பித்தேன்.

நீங்கள் சாதிக்க வேண்டுமென்றால் ரிஸ்க் எடுத்தே ஆகவேண்டும் என்றார்.

அமிர் கானின் நடிப்பில் வெளியான லால் சிங் சத்தா விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பினை பெற்றாலும் வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்தது.

சமீபத்தில் அவர் தனது குடும்பத்துடன் நேரம் செலவிட இருப்பதால் இனி சில ஆண்டுகளுக்கு நடிக்க போவதில்லை என கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

-நன்றி தினமணி.