பேசும் படம்:
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் 2002-ம் ஆண்டு உருவான திரைப்படம் ‘ரமணா’. இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இதில் சிம்ரன், விஜயன், யோகி சேது, அஷிமா, முகேஷி ரிஷி என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
படம் வந்த சமயத்தில், இதில் இடம்பெற்ற வசனங்களும் காட்சிகளும் பெரும் பேசுபொருளாகின. அதோடு, கேப்டன் விஜய்காந்துக்கும் பெரும் வெற்றியை ஈட்டித் தந்த படங்களில் ஒன்றாகவும் ‘ரமணா’ அமைந்தது!
அந்தப் படத்திற்கான படப்பிடிப்பின் போது கேப்டன் விஜயகாந்துக்கு காட்சிகளை விளக்குகிறார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்.