Take a fresh look at your lifestyle.

மந்த்ராலயம் சென்ற ராகவா லாரன்ஸ்!

லைக்கா சுபாஷ்கரன் தயாரிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘சந்திரமுகி 2’ திரைப்படம், மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அப்படத்தின் நாயகனான ராகவா லாரன்ஸ் மந்த்ராலயம் சென்று ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளை தரிசித்திருக்கிறார்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ராகவா லாரன்ஸ் தீவிர ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் பக்தர்.

சென்னையில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு தனி ஆலயம் கட்டி அவர் மீது அளவு கடந்த பக்தியை செலுத்திவருகிறார்.

இந்நிலையில் அவர் நடிப்பில் உருவாகி, இன்று வெளியாகியுள்ள ‘சந்திரமுகி 2’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக மந்த்ராலயத்தில் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளை நேரில் தரிசித்திருக்கிறார்.

ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பதும், அவர் பின்பற்றும் பல கொள்கைகளை இவரும் தீவிரமாக கடைப்பிடிப்பவர் என்பதும் அனைவரும் அறிந்தது தான்.

அந்த வகையில் ரஜினிகாந்தை போலவே ‘சந்திரமுகி 2’ படத்தின் வெளியீட்டிற்கு முன் மந்த்ராலயம் சென்று ராகவேந்திரா சுவாமிகளை தரிசித்து ஆசி பெற்றிருப்பதை பலரும் பாராட்டுகிறார்கள்.