கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் கூட்டணியில் வெளியான திரைப்படம் ‘புஷ்பா: தி ரைஸ்’.
செம்மரக் கடத்தலை மையமாகக் கொண்டு கதையாக உருவாக்கப்பட்டிருந்த திரைப்படத்தில் புஷ்ப ராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த அல்லு அர்ஜுன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்தப் படத்தில் ஃப்ஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா, ஜெகதீஷ் பிரதாப் பந்தாரி, சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி இருந்தது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான அனைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை மூட்டியது.
இந்தப் படம் உலகளவில் வசூலில் ரூ.390 கோடிவரை ஈட்டிய நிலையில், இதனுடைய இரண்டாம் பாகமாக ‘புஷ்பா-2: தி ரூல்’ திரைப்படம் வெளிவந்துள்ளது.
முதல் பாகத்திற்குக் கிடைந்த வரவேற்பைப் தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கும் அதிகப்படியான வரவேற்பையும் சினிமா ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது புஷ்பா-2 திரைப்படம்.
அல்லு அர்ஜுன் – ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் ’புஷ்பா 2 தி ரூல்’ திரைப்படம் கடந்த டிசம்பர் 5ம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியானது.
படம் வெளியான முதல் நாளிலேயே இந்தியாவில் அதிக வசூலை ஈட்டிய இந்திய திரைப்படமாக மாறி வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் 6 நாட்கள் வசூலை அறிவித்திருக்கும் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் ரூ.1002 கோடி வசூலை ஈட்டியிருப்பதாகவும், ஆயிரம் கோடி அதிவேகமாக ஈட்டிய முதல் இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்திருப்பதாகவும் அறிவித்துள்ளது.
தெலுங்கு சினிமாவில் ஆயிரம் கோடி வசூலை ஈட்டிய திரைப்படங்கள் பட்டியலில் பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர்., கல்கி 2898 ஏடி திரைப்படங்களைத் தொடர்ந்து 4வது திரைப்படமாக புஷ்பா 2 திரைப்படமும் இணைந்துள்ளது என்பது படக்குழுக்கு பெரும் சந்தோஷத்தை கொடுத்துள்ளது.