Take a fresh look at your lifestyle.

ரூ.333 கோடி வசூலை எட்டிய ‘பெத்தி’!

‘உப்பண்ணா’ படத்தை இயக்கி பிரபலமான புச்சிபாபு சனா இயக்கத்தில் ராம்சரண், சிவராஜ்குமார், ஜான்விகபூர், திவ்யேந்தி, ஜெகபதி பாபு நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம், ‘பெத்தி’.

கிரிக்கெட் மற்றும் மல்யுத்தத்தை மையமாக கொண்டு வெளியான இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் என பான் இந்தியா திரைப்படமாக வெளியானது.

சமீபத்தில் கூட இப்படத்தில் ஜான்வி கபூர் இடம்பெறும் காட்சிகள் ஆபாசமாக காட்டப்பட்டதாக பிரச்சனை கிளம்ப இயக்குநர் புச்சிபாபு சமீபத்தில் மன்னிப்பு கேட்டிருந்தார்.

கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், கடந்த 7 நாட்களில் ‘பெத்தி’ படம் ரூ.333 கோடியை எட்டியுள்ளது.

வரும் நாட்களில் வசூல் வேட்டை தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.