Take a fresh look at your lifestyle.

ரூ.150 கோடி வசூலைத் தாண்டிய ‘ராயன்’!

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘ராயன்’ திரைப்படத்தின் வசூல் உலக அளவில் 150 கோடி ரூபாயைத் தாண்டி விட்டது. பிரபல சினிமா வர்த்தக இணையதளமான சாக்னில்க் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

நிமிஷா சஜயனின் புதிய படம் ‘என்ன விலை’!

நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய தமிழ் படத்துக்கு ‘என்ன விலை’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இம்மாத இறுதியில் படப்பிடிப்பு நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தி தேவை என்றால் கற்கலாம்; ஆனால் திணிக்கக் கூடாது!

அண்மையில் நேர்காணல் ஒன்றில் ரகுதாத்தா இந்தி மொழிக்கு எதிரான படம் என்று கூறப்படுகிறது என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்த கீர்த்தி சுரேஷ்  “ரகுதாத்தா இந்தி திணிப்புக்கு எதிரான படம். நான் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பு…

அடியோஸ் அமிகோ – எதிர்பாராத சந்திப்பினால் மாறும் வாழ்வு!

ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நடிகர்கள் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிப்பதென்பது மலையாளத் திரையுலகில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. வழக்கத்திற்கு மாறானதாக அவர்கள் ஏற்கும் பாத்திரங்களைப் படைத்துவிட்டு, அவற்றைச்…

அதிமுக கொடியை முதன்முதலாகக் காட்டிய ‘இதயக்கனி’!

‘சத்யா மூவீஸ்' நிறுவனம் எம்.ஜி.ரை வைத்து தயாரித்த 6வது மற்றும் கடைசிப் படம் - ‘இதயக்கனி’. எம்.ஜி.ஆருக்கு மிகப்பெரும் வெற்றிப் படைப்பாக அமைந்த ‘இதயக்கனி’ உருவான விதம் குறித்து இங்கே பார்க்கலாம்.

பான் இந்தியா படமாக வெளிவரும் ஜோஜு ஜார்ஜின் ‘பனி’!

மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் மலையாளப் படம் 'பனி'. கேரளாவின் திருச்சூரில் இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே நடக்கும் பழிவாங்கும் கதையை மையமாக வைத்து இந்தத் த்ரில்லர் படம் உருவாகியுள்ளது. இப்படம் 5 மொழிகளில் வெளியாகிறது.

குருவுடன் கலகலப்பான தருணம்!

பேசும் படம் : கமல், ரஜனி மட்டுமல்ல, நடிகர் பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலரால் குருவாக மதிக்கப்பட்டவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். பிரதாப் போத்தன் ஒரு காட்சியை நடித்து விவரிக்க அமரக்களமாகச் சிரிக்கிறார்கள் கே.பாலசந்தரும்,…

பல ஆண்டுகள் கடந்தும் மயக்கும் ‘சக்கரவர்த்தித் திருமகள்’!

அறுபத்தைந்து வருடம் கழித்தும் ஒரு படத்தை அதே ரசனையோடு இப்போதும் பார்க்க முடியும் என்றால் அந்தப் படங்களின் லிஸ்ட்டில் ‘சக்கரவர்த்தித் திருமகள்’ நிச்சயம் இருக்கும்! எம்.ஜி.ஆர், அஞ்சலிதேவி, எஸ்.வரலட்சுமி, பி.எஸ்.வீரப்பா, என்.எஸ்.கிருஷ்ணன்,…

தமிழ் ரசிகர்களுக்குத் திகில் அனுபவத்தைத் தரவிருக்கும் ‘ஏலியன்: ரோமுலஸ்’!

ரிட்லி ஸ்காட் தயாரிப்பில், ஃபெடே அல்வாரெஸ் இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் ஹாரர் படமான உருவாகி இருக்கும் 'ஏலியன்: ரோமுலஸ்' திரைப்படம் வரும் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.