Take a fresh look at your lifestyle.

ஹைப்பர் லிங்க் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள ‘நிறங்கள் மூன்று’!

‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். அப்படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றதை அடுத்து அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

இதையடுத்து அருண்விஜய், பிரியா பவானி சங்கர் நடிப்பில் ‘மாஃபியா’ என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் சுமாராக ஓடியது.

இதைத் தொடர்ந்து தனுஷ், மாளவிகா மோகனன் நடித்த மாறன்’ படத்தை இயக்கி இருந்தார் கார்த்திக் நரேன்.

இந்தப் படம் ஓடிடியில் நேரடியாக வெளியான நிலையில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

அதைத் தொடர்ந்து, கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் ‘நிறங்கள் மூன்று’. இதில் அதர்வா, சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஹைப்பர் லிங்க் த்ரில்லர் கதையம்சம் கொண்ட படமான இதற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தது.

இத்திரைப்படம் வரும் நவம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தில் அதர்வா வெற்றி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் புரோமொஷன் பணி மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.