Take a fresh look at your lifestyle.

சீனாவில் வெளியாகும் ’மகாராஜா’!

கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி விஜய் சேதுபதி நடிப்பில், நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில்  உருவான திரைப்படம் ‘மகாராஜா’.

விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமான இந்தப் படத்தில் அபிராமி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி நடராஜ், சிங்கம் புலி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, வசூலிலும் அமோக வெற்றி பெற்றிருந்த இந்தப் படத்திற்கு அஜனீஸ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

குறைந்த பட்ஜெட்டில் உருவாகி, அருமையான நடிப்பால் மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், ஓடிடியிலும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இந்தப் படம் சீன மொழியில் டப் செய்யப்பட்டு சீனாவில் வெளியாக உள்ளது.

வரும் நவம்பர் 29-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் போஸ்டரை இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்தத் தகவல் இணையத்தில் வைரலாகி உள்ளது.