திரையுலகில் பொதுவாகவே நடிகர்கள் பின்பற்றும் அத்தனையும் ரசிகர்களும் அதைத்தான் பின்பற்றுவார்கள். அது நல்லதா கேட்டதா என யோசிக்கும் சில பேர்களுக்கும் மட்டும் தான் உண்டு என சொல்லலாம் அந்த அளவிற்கு நடிகர் நடிகைகளின் மோகம் அதிகமாகவே உள்ளது.
அந்த வகையில் நடிகர்களும் தான் பிரபலப்படுத்தும் பொருளை சரியா, தவறா? என பெரும்பாலும் யோசிக்க மாடார்கள். இவர்கள் விளம்பரப்படுத்தும் எதுவும் ரசிகர்களுக்கு பாதிப்பு இல்லாமல் இருந்தால் சரி என்று யோசிக்க வைக்கிறது சில நேரங்களில்.
இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராமில் செம்பருத்தி டீ குடிப்பது நல்லது என பதிவிட்டுருந்தார்.
தான் தொடர்ந்து செம்பருத்தி டீ குடித்து வருவதாகவும் செம்பருத்தி டீ ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களுக்கு சிறந்தது என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
நயன்தாராவின் இந்தப் பதிவை பார்த்த ரசிகர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்று நாங்களும் செம்பருத்தி டீ குடிக்கப் போகிறோம் என்று தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நயன்தாராவின் பதிவுக்கு கல்லீரல் மருத்துவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “செம்பருத்தி டீ சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு நல்லது என்று நயன்தாரா சொல்லி இருக்கும் விஷயங்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை.
தினமும் செம்பருத்தி டீ குடிப்பதில் கவனம் தேவை. சர்க்கரை நோய், ரத்த அழுத்தத்துக்கு செம்பருத்தி டீ நல்லது என்று நயன்தாரா சொல்லி இருப்பது உண்மை அல்ல.
ஆண்களும், பெண்களும் செம்பருத்தி டீயை தினமும் குடித்தால் உடல் நலனில் பிரச்சினைகள் வரும். உடல் ஆரோக்கியத்துக்கு மருத்துவர்களின் ஆலோசனையை பெறுங்கள்” என்று கூறியுள்ளார். எதிர்ப்பை தொடர்ந்து செம்பருத்தி டீ பதிவை நயன்தாரா நீக்கிவிட்டார்.