Take a fresh look at your lifestyle.

தொடர் தோல்வியால் சம்பளத்தைக் குறைத்த அக்ஷய்குமார்!

இந்தி சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் நடிகர் அக்ஷய் குமார். இவர் தமிழில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவான  ‘2.0’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார்.

இவரது படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றதால் சம்பளத்தை ரூ.150 கோடியாக உயர்த்தினார். இந்தித் திரையுலகில் அதிக சம்பளம் பெறும் நடிகர் என்ற பெயரையும் பெற்றார்.

ஆனால் நேரம் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. படங்கள் தோல்வி அடைந்தால் எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் கீழே விழுந்து விடுவார் என்பதற்கு அக்ஷய்குமார் உதாரணமாக மாறி இருக்கிறார்.

இந்தியில் தொடர்ந்து வெற்றிப் படங்களின் சுனாமியை உருவாக்கிய அக்ஷய்குமாருக்கு ‘பச்சன் பாண்டே’ படத்தில் இருந்து தோல்வி தொடங்கியது. இவர் நடித்த 9 படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்தன.

இந்த நிலையில், தமிழில் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘சூரரைப் போற்று’ படத்தை இந்தியில் ரீமேக் செய்தார் சுதா கொங்கரா. ‘சர்ஃபிரா’ எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார்.

இந்தப் படம்  வசூலில் 18.80 கோடி ரூபாய் மட்டுமே பெற்றுள்ளது. இந்தப் படமும் அக்ஷய் குமாருக்கு தோல்வியைத் தந்துள்ளது.

அக்ஷய்குமார் தனது கடைசிப் படத்துக்கு ரூ.165 கோடி சம்பளம் வாங்கி இருந்த நிலையில், இப்போது சம்பளத்தை ரூ.30 கோடியாக குறைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர் தோல்விப் படங்களால் அக்ஷய்குமார் சம்பளத்தைக் குறைத்திருப்பது இந்திப் பட உலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.