Take a fresh look at your lifestyle.

விரைவில் நடிகர் சங்க விழா!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தைக் கட்டி முடிக்க ரூ. 40 கோடி வரை கடன் பெற நடிகர் சங்கம் முடிவு செய்தது.

புதிய கட்டிட பணிகளைத் தொடர்வதற்கான சங்கத்தின் வைப்பு நிதியாக நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், உதயநிதி, தனுஷ், நெப்போலியன், சிவகார்த்திகேயன் உட்பட பலர் நிதி வழங்கி யுள்ளனர். இந்நிலையில் வெளிநாட்டில் கலைநிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டவும் நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக ஆலோசிப்பதற்காக நடிகர் சங்க நிர்வாகிகள், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்களான பூச்சி எஸ்.முருகன், கருணாஸ் ஆகியோர், ரஜினிகாந்தை அவர் வீட்டில் நேற்று சந்தித்து ஆலோசலை நடத்தினர்.

இதுபற்றி நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனிடம் ஆலோசனை பெறுவது வழக்கம்.

அந்த வகையில், அடுத்து நடத்த திட்டமிடப்பட்டுள்ள நட்சத்திர கலை விழா குறித்து சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

நடிகர் சங்க கட்டிடம் பணிகள் குறித்து ஆர்வமாக கேட்டறிந்த ரஜினிகாந்த், விரைவில் நேரில் வந்து பார்வையிட உள்ளதாக தெரிவித்தார்” என்று கூறப்பட்டுள்ளது.

– நன்றி: இந்து தமிழ் திசை.