Take a fresh look at your lifestyle.

ஆளுமைகளை கௌரவிக்கும் தமிழ் சினிமா!

தமிழ்த் திரை​யுல​கின் முன்​னணி இயக்​குநர்​களான பார​தி​ராஜா, கே.பாக்​ய​ராஜின் சாதனைகளைப் பாராட்டி கவுரவிக்​கும் வகை​யில், ‘ராஜகோபுரங்​கள் நினைவு உற்​சவம்’ என்ற நினைவு அஞ்​சலி நிகழ்ச்​சி, வரும் 16-ம் தேதி காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை, சென்னை கலை​வாணர் அரங்​கில் நடத்​தப்​படு​கிறது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்​பாளர்​கள் சங்​கம், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்​கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலா​ளர்​கள் சம்மேளனம் (பெப்​சி), தமிழ்​நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்​கம் ஆகிய அமைப்​பு​கள் இணைந்து இதை நடத்துகின்​றன.

இது தொடர்பான விவரங்களை சென்னையில் செய்தி​யாளர்​களிடம் பேசியபோது, ஜி.கே.எம்​. தமிழ்​குமரன், நாசர், ஆர்.கே.செல்​வ​மணி, டி.சி​வா, கே.எஸ்​.ரவி​கு​மார், லிங்​குசாமி ஆகியோர் தெரிவித்தனர்.

ஆர்​.கே.செல்​வ​மணி பேசும்போது; “தமிழ்த் திரை​யுல​கில் பல்​வேறு சாதனைகள் படைத்த பாரதி​ராஜா, கே.​பாக்​ய​ராஜ் ஆகியோ​ருக்கு அவர​வர் சொந்த ஊரில் மணிமண்டபம் கட்​டி, அவர்​களின் மார்​பளவு வெண்கலச் சிலை அமைக்​கப்​பட உள்ளது.

16-ம் தேதி நடைபெறும் ‘ராஜகோபுரங்​கள் நினைவு உற்​சவம்’ நிகழ்ச்​சி​யில் கலந்​து​கொள்ள​தமிழக முதல்​வர் விஜய், அமைச்​சர் ராஜ்மோகன் ஆகியோ​ருக்கு அழைப்பு விடுத்​துள்​ளோம்.

ரஜினி​காந்த், கமல்​ஹாசன், சிரஞ்​சீ​வி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், சிவ​ராஜ்கு​மார், ரிஷப் ஷெட்​டி, வி.ர​விச்​சந்​திரன், மம்மூட்டி, மோகன்​லால், ஜாக்கி ஷெராப், போனி கபூர் மற்​றும் மத்திய அமைச்சர்​கள் எல்​.​முரு​கன், சுரேஷ் கோபி ஆகியோர் கலந்​துகொண்டு பேசுகின்றனர்.

பார​திராஜா, கே.​பாக்​யராஜ் ஆகியோரின் திரைப்படங்கள் குறித்த புகைப்படக் கண்​காட்சி இடம்​பெறுகிறது.

அவர்​களின் படங்​களில் இருந்து 20 பாடல்​களைத் தேர்வு செய்​து, மேடை​யில் நடன நிகழ்ச்சி நடத்​தப்படு​கிறது.

பார​திராஜா, கே.​பாக்​ய​ராஜ் வாழ்க்​கையை 10 நிமிடத்தில் குறும்பட​மாக ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். நிகழ்ச்​சி​க்கு பொதுமக்​களுக்கு அனுமதி இலவசம். இந்​நிகழ்ச்​சி​யின் கிரியேட்டிவ் ஹெட் பொறுப்பை பார்த்​திபன் ஏற்​றுள்​ளார்​.”