சித்தாரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் அக்டோபர் 31-ம் தேதி தீபாவளி அன்று வெளியான திரைப்படம் ‘லக்கி பாஸ்கர்’.
பான் இந்தியத் திரைப்படமாக உருவான இந்தப் படத்தில் மீனாட்சி சவுத்ரி, குழந்தை நட்சத்திரம் ரித்விக், ராம்கி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வரும் ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்துள்ளது.
துல்கர் சல்மான் பல்வேறு மொழிகளில் தனது அழுத்தமான நடிப்பின் மூலம், தான் பல மொழி நட்சத்திரம் என்பதை நிரூபித்துள்ளார்.
‘லக்கி பாஸ்கர்’ படத்தில், துல்கர் சல்மான் ஒரு எளிய பேங்க் கேஷியராக நடித்துள்ளார். இதுவரை பார்த்திராத தோற்றத்தில் இந்தப் படத்தில் அவரைப் பார்க்க முடிகிறது.
சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் சூர்யதேவரா நாக வம்சியும், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் சாய் சௌஜன்யாவும் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
‘லக்கி பாஸ்கர்’ படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பு பக்காளன் மற்றும் நவின் நூலி படத்தொகுப்பாளர்.
ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இந்தப் படத்திற்கு தற்போதுவரை உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது. இது குறித்து படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.