பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடித்த `லெஜன்ட்’ என்ற திரைப்படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது அவருடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடிப்பில், ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான `லெஜண்ட்’ என்ற திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி திரையரங்கிலும் ஓடிடியிலும் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக லெஜண்ட் சரவணன் அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக கூறப்பட்ட நிலையில் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்தப் படத்தை சமீபத்தில் ‘கருடன்’ என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘புதிய விளையாட்டு ஆரம்பம்’ என்ற கேப்ஷனுடன் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், லெஜெண்ட் சரவணனின் சில போட்டோஷூட் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளது.
– தேஜேஷ்.